இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புக்கள் அதிகம்!! பெண்களே அலார்ட்!!

Photo of author

By Rupa

இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புக்கள் அதிகம்!! பெண்களே அலார்ட்!!

சமீபகாலமாக பெண்கள் பலரும் இந்த மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பகட்ட காலத்தில் இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளடைவில் இது நமது உயிரையே பறித்து விடும். இந்த பதிவில் மார்பகப் புற்று நோயானது எப்படி யாருக்கெல்லாம் வரும் என்பது குறித்து பார்க்கலாம்.மார்பக புற்றுநோயானது உடம்பில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் ஆனால் இந்த மார்பகத்தில் பால் சுரப்புகளில்தான் உருவாகிறது.

அதிலும் பாலூட்டாத பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகம் என கூறுகின்றனர். பாலூட்டும் பெண்களுக்கு இந்த மார்பக புற்று நோயால் உண்டாகும் செல்கள் வருவது கட்டுக்குள் வைக்கப்படும். இதுவே பாலூட்டாத பெண்களுக்கு இது கட்டுக்குள் வைக்க முடியாத காரணத்தால் எளிமையாக வந்து விடுகிறது. அதேபோல பாலூட்டுதலை நிறுத்தும் சமயத்திலும் ஒரு சிலருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

குறிப்பாக அதிக அளவு ஹார்மோன் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு கட்டாயம் மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணிகள் அதிகம். பெண்கள் அவ்வபோது தங்களது மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அதனை அப்படியே விட்டுவிடக்கூடாது.

நாளடைவில் அது மார்பு புற்று நோயாக கூட இருக்கலாம். முறையான மருத்துவரிடம் கொண்டு இது குறித்து ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

யாருக்கெல்லாம் மார்பக புற்று நோய் வரலாம்:
மாதவிடாய் காலத்தில் அதிக அளவு உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இதன் சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதேபோல தைராய்டு க்கு உரிய மருந்து மாத்திரை எடுக்கவில்லை என்றாலும் மார்பு புற்றுநோய் வரலாம்.

அதேபோல துரித உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த மார்பக புற்றுநோய் எளிதில் வந்து விடும்.
சில சிறு வயது பெண்களுக்கு இளம் வயதிலேயே கர்ப்பப்பை எடுக்கும் சூழல் வந்திருக்கும் அவர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று இது குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எளிதில் வந்துவிடும்.

இந்த நவீன காலகட்டத்தில் பெண்கள் பலரும் மது அருந்துவது புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை வைத்துள்ளனர்.
இந்த பழக்கங்களினாலும் புற்றுநோய் உண்டாகலாம்.
இது மட்டும் இன்று அதீத உடல் பருமனும் மார்பக புற்று நோய் வருவதற்கு வழி வகுக்கலாம்.

இதனை தவிர்க்க பெண்கள் ஆரோக்கியமான நார்ச்சத்து உள்ள பச்சை காய்கறிகளை எடுத்துக்கொண்டு சாப்பிட்டு வர இதனை தவிர்க்கலாம்.
அதேபோல மார்பகத்தில் ஏதேனும் சிறிய மாற்றம் இருப்பினும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.