நீட் தேர்வு விவகாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் அனைத்து கட்சி கூட்டம்!

0
173

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது, இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசும், அனைத்து கட்சிகளும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் தமிழக ஆளுநர் இதுவரையில் ஒப்புதல் வழங்கவில்லை.

நாடாளுமன்ற அதிமுக வின் குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்பிகள் குடியரசுத் தலைவர் அலுவலகம் சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படுவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பாக விரிவாக மனு ஒன்றை வழங்கினார்கள்.

இதற்கு நடுவே தமிழக சட்டசபையில் விரிவாக உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சட்டசபையில் இருக்கின்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தை வரும் 8ம் தேதி கூடி ஆலோசிக்க இருப்பதாக கூறினார்.

அதனடிப்படையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற பத்தாவது மாடி கட்டிடத்தில் அமைந்திருக்கின்ற கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் அனைத்து கட்சி கூட்டம் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக உட்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleநாட்டில் அடுத்த மாதம் நோய்த்தொற்று பரவல் உச்சமடையும்! அமெரிக்க விஞ்ஞானி அதிரடி கணிப்பு!
Next articleதமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! இன்று நடைபெறுகிறது!