தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்! இன்று நடைபெறுகிறது!

0
123

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதத்தில், செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு தொடங்கி வைத்து நடைபெறுகிறது. அதன்மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அத்துடன் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாமில் முழு ஊரடங்கு காரணமாக, சனிக்கிழமை தோறும் நடைபெறும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 1600 பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிவடைந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.