நாட்டில் அடுத்த மாதம் நோய்த்தொற்று பரவல் உச்சமடையும்! அமெரிக்க விஞ்ஞானி அதிரடி கணிப்பு!

0
65

நாட்டில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கொரோனா வைரஸ் மறுபடியும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நாட்டில் அடுத்த மாதம் நோய்த்தொற்று உச்சத்தைத் தொடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உலக அளவிலான சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம் என்ற மையம் இயங்கி வருகின்றது இந்த மையத்தின் தலைவரும் அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் கிறிஸ்டோபர் முராரே இந்தியாவின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை வழங்கி இருக்கிறார்.

அப்போது அவர் தெரிவிக்கும் போது இந்தியாவைப் பொறுத்த வரையில் அடுத்த மாதம் நோய்த்தொற்று உச்சத்தை அடையும் என்று நாங்கள் கருதுகின்றோம். நோய்த் தொற்று பரவல் உச்சம் அடையும்போது நாள்தோறும் 5 லட்சம் பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படலாம். அதேசமயம் கடந்த அலையான டெல்டா பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்சமயம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும், குறைவாகவே இருக்கும் என்று கூறினார்.