ஆல்ரவுண்டர் தமிழ்நாடு கவர்னர்!! மீண்டும் குற்றச்சாட்டு அமைச்சரின் அதிரடி பேட்டி!!
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் மீது அடிக்கடி பல குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சில அரசியல் கட்சி தலைவர்கள் , இவர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இவர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியில் நீக்குவதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்த போது கவர்னர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிண்டிகேட் கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்தியதிற்கு எதிர்ப்பு தெரிவித்த கவர்னர், அதே கூட்டத்தை ராஜ்பவனில் ஏன் நடத்தினார் என்று கேட்டார். மேலும் செயலாளரை கூட சந்திக்க மறுத்த இவர் நான் இல்லாமல் பல கூட்டத்தை நடத்தியுள்ளார். மேலும் கவர்னர் தமிழ்நாட்டில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார் என்றும் இவர் அனைத்து துறையிலும் அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே கவர்னர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் ஆளுநர் அரசியல் மட்டும் பேசி வருவதாக அமைச்சர் பேட்டியில் தெரிவித்தார். மேலும் யார் தவறு செய்தாலும் முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். இது போன்று பல குற்றச்சாட்டுகளை ஆளுநர் மீது தெரிவித்தார். தமிழ்நாடு கவர்னர் ஆல்ரவுண்டர் போல எல்லா துறையிலும் அரசியல் செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.