அனைத்து கட்சிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி!! மத்திய அரசு அழைப்பு வெளிவந்த தகவல்!!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வந்தது. இந்த நிலையில் இந்த தகவலை ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார்.
மேலும் இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டம் புதுடெல்லியில் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி புதியதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளதுள்ளார்.
இந்த கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மௌனம் சாதிப்பது,வருமான வரி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை , வணிகம், ஒரே மாதிரியான சிவில் சட்டம் இன்னும் பல விவகாரங்களை பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று ஏதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.