அனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை!

Photo of author

By Kowsalya

இந்த மூலிகையின் பெயர் சிவனார் வேம்பு. இது செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. இது வருடாந்திர வளர்ச்சி செடி. இதில் 750 வகைகள் உள்ளன. இதன் இலைகள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக இருக்கும். தண்டு சிவப்பு நிற உடையது. இந்த விதை மூலம் இனவிருத்தி செய்யபடுகிறது.

1. சிவனார் வேம்பு செடியை பிடிங்கி வேரோடு உலர வைத்து பொடித்து கொள்ளவும். பின் சம அளவு கற்கண்டு தூள் சேர்த்து பாலில் கலந்து குடித்து வர நாள்பட்ட தொழு நோய் போன்ற கடும் நோய்களையும் குணப்படுத்தும். ஆயுளை நீட்டிக்கும்.
2. இந்த செடியை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர சொறி, சிரங்கு, கபால கரப்பான் ஆகியவை நீங்கும். தலையில் உள்ள சொறி, சிரங்கும் நீங்கும்.
3. இந்த செடியின் இலையை எடுத்து அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் கட்டி வந்தால் கட்டி உடைந்து விடும், இல்லை அமுங்கி விடும்.
4. இந்த வேரை கொண்டு பல் துலக்கி வந்தால் பல் வலி, வாய்ப்புண் சரியாகும்.

மேலும் சிவனார் வேம்பின் மருத்துவ பயன்கள்:
வீக்கத்தை குறைக்கும். கட்டிகளை கரைக்கும். நஞ்சை முறிக்கும். குடல் புண்களை குணமாக்கும். இந்த பல நோய்களுக்கு அருமருந்தாகும் இந்த சிவனார் வேம்பு மூலிகையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.