சுளுக்கு ரத்தக்கட்டு அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

0
790
#image_title

சுளுக்கு ரத்தக்கட்டு அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

கைகள் கால்ஙளில் ஏற்படும் சுளுக்கு, இடுப்பு பகுதியில் ஏற்படும் சுளுக்கு, கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுளுக்கு, அடிபட்டதால் ஏற்படும் வீக்கம், இரத்தக்கட்டு இவை அனைத்தையும் சரிசெய்யக் கூடிய மருந்தை தயார் செய்து எவ்வாறு அதை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

இந்த மருந்தை செய்ய தேவையான பொருள்கள்…

 

* புளி

* கல்லுப்பு

* பூண்டு

* பச்சை கற்பூரம்

 

இதை தயார் செய்யும் முறை…

 

முதலில் புளியை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு ஊற வைக்க வேண்டும். ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

 

ஒன்றரை மணி நேரம் ஊறிய புளியை நன்கு பிளிந்து அதன் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கடாய்(வடசட்டி) வைத்து அதில் இந்த புளி கரைசலை ஊற்ற வேண்டும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள கல்லுப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை லேசான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

 

பிறகு எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.

 

புளிக்கரைசல் நன்கு கெட்டியான பத்திற்கு வரும் வரையில் கொத்திக்க வைக்க வேண்டும். கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கிக் கெள்ளவும். பிறகு இதில் இடித்து வைத்துள்ள பூண்டு விழுதை இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இந்த புளி கரைசலில் பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும். பச்சை கற்பூரத்தை சேர்த்த பிறகு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

 

இதை ஒரு சிறிய பாத்திரத்திற்கு(பவுல்) மாற்ற வேண்டும். சுளுக்கை போக்கும் மருந்து தயாராகி விட்டது.

 

சுளுக்கு, இரத்த கட்டு, வீக்கம் உள்ள பகுதியில் இந்த மருந்தை சிறிதளவு எடுத்து தேய்க்க வேண்டும். இதன் மூலம் சுளுக்கு, இரத்த கட்டு, வீக்கம், வலி எல்லாம் குணமாகும்.

Previous articleகுழந்தைகள் தூங்கும் போது பல் கடிக்கிறீங்களா!! இல்ல பல் அரைக்கிறீங்களா!!இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!
Next articleஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!