ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

Photo of author

By Divya

ஆன்மீகப்படி இவையெல்லாம் செய்ய வேண்டும்.. இவையெல்லாம் செய்யக் கூடாது!

வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கியவாறு வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்க முடியவில்லை என்றால் தெற்கை தவிர இதர திசைகளை நோக்கி வைக்கலாம்.

அதேபோல் கடவுளை வணங்கும் போது தெற்கு பகுதியில் வடக்கு பார்த்தவாறு வணங்கலாம். பூஜை செய்பவர்கள் தென்மேற்கு அல்லது தென்கிழக்கு திசை பார்த்தவாறு பூஜை செய்யக் கூடாது.

பணத்தை வாரி வழங்கும் லட்சுமி, குபேரர் ஆகிய கடவுள் படங்களை வீட்டிற்கு வெளியில் பார்த்தவாறு மாட்டக் கூடாது.

கடவுளுக்கு படைத்த பொருட்களை சமைத்து மீண்டும் கடவுளுக்கு படைக்கக் கூடாது.

கடவுளுக்கு அன்னம் படைக்கும் பொழுது வாழை இலையில் வைத்து தான் படைக்க வேண்டும். எவர் சிலவர் பாத்திரங்களில் வைத்து படைக்கக் கூடாது.

அசைவம் செய்ய பயன்படுத்திய பாத்திரங்களில் கடவுளுக்கு பிரசாதம் செய்யக் கூடாது.

வீட்டு வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு தான் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும்.

திங்கட் கிழமை அன்று விளக்கு ஏற்ற பயன்படுத்தும் விளக்கு திரியை கைகளால் தொடக் கூடாது.