குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

Photo of author

By Divya

குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் இவை எல்லாம் நடக்கும்..!

எந்த தெய்வத்தை வணங்க மறந்தாலும் அவரவர் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் இருத்தல் கூடாது.

தலைமுறையை காக்கும் காவல் தெய்வத்தை மாதம் ஒருமுறை பூஜை செய்து வழிபட்டு வருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். குலதெய்வம் மனம் குளிரும்படி நடந்து கொண்டால் மட்டுமே நம் வம்சம் விருத்தி அடையும்.

குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவது நல்லது.

இவ்வாறு தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டை செய்து வந்தால் முன்னோர்கள் சாபம் நீங்கும். குலதெய்வ கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றால் அமாவாசை அன்று குலதெய்வ கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்ய வேண்டும்.

குலதெய்வ கோயிலுக்கு வெல்லம் வாங்கி கொடுத்து வழிபட்டு வந்தால் பித்ரு சாபம் நீங்கும்.

தோஷங்கள், கர்ம வினைகள் அனைத்தும் நீங்க குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

வம்சம் விருத்தி அடையும். தடைபட்ட அனைத்து காரியங்களும் நடைபெறும். செல்வ செழிப்பு ஏற்பட்டு குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.