மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்!
மதுரை மாநகராட்சி பகுதிகளில், புதிதாக வீடுகளில் உள்ள நாய், மாடு, எருமை, குதிரை போன்ற வீட்டு விலங்குகளை வளர்த்தால் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மாநகராட்சி புதிய கட்டளை விதித்துள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் திட கழிவுகள் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் திடீர் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் தெருவில் வீட்டு நாய் மற்றவர்கள் அச்சுருத்தினாலோ அல்லது அசுத்தம் செய்து விட்டாலோ அதன் உரிமையாளர் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டுமென்றும் இறைச்சிக்கடை மற்றும் பிராணிகள் விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுர அடிக்கு ரூ.10 வழங்க வேண்டும் என்றும் மதுரை மாநகராட்சி புது அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.
நம் முன்னோர்கள் எல்லாம் வீட்டு விலங்குகளின் கழிவுகள் மண்ணிற்கு உரம் என்று கூறிய நிலையில், மதுரை மாநகராட்சி இவ்வாறு கூறி இருப்பது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதை தவறும் பட்சத்தில் அதற்கான வேறு தண்டனைகளும் வழங்கப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். இன்னும் சில கிராம புறங்களில் ஆட்டின் கழிவுகளை செடிகளுக்கு உரமாக இட்டு வருகின்றனர் எனபது குறிப்பிடத் தக்கது.