லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னாள் அமைச்சர்!

0
59

தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு தொடர்பு இருக்கின்ற இடங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், கோயமுத்தூர் வீட்டிலோ அல்லது சென்னையிலோ எஸ் பி வேலுமணி இல்லை என்று சொல்லப்படுகிறது

.சட்டசபை கூட இருப்பதன் காரணமாகவும், அவர் அதிமுகவில் சட்டமன்றத் கொறடாவாக இருப்பதன் காரணமாகவும், அது தொடர்பான பணிகளைச் செய்வதற்காக சென்னை வந்த வேலுமணி சென்னை அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற சட்டசபை உறுப்பினர்கள் விடுதியில் இரண்டாம் தொகுதி சட்டசபை உறுப்பினராக தனக்கு ஒதுக்கப்பட்ட என்ற அளவில்தான் எஸ் பி வேலுமணி இருந்திருக்கிறார்.

நேற்றைய தினம் இரவே அவர் அங்கு தான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இன்று காலை அனைத்து இடங்களிலும் சோதனை செய்வதற்காக சென்ற சமயத்திலேயே ஒரு பிரிவினர் சட்டசபை உறுப்பினர் விடுதியில் இருக்கின்ற வேலுமணியின் அறைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கே காலை 6 மணியில் இருந்தே அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அவருடைய கோயம்புத்தூர் இல்லத்தில் அதிமுகவினர் ஒன்று திரண்ட நிலையில், அங்கே அவர் இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தார்கள் இந்த சூழ்நிலையில், சென்னை ஆர் ஏ புரத்தில் இருக்கின்ற இல்லத்திலும் அவர் இல்லை எனவும், சட்டசபை உறுப்பினர்கள் விடுதியில் இருக்கிறார் எனவும், தெரிந்து சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ராஜேஷ் பாபு, பாலகங்கா, விருகை ரவி,போன்றோர் சட்டசபை உறுப்பினர் விடுதிக்கு வந்து விட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில், காவல்துறையினரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர் விடுதிக்கு உள்ளே போலீசாரும், விடுதிக்கு வெளியே அதிமுகவினரும், நின்றுகொண்டு அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றது. கீழ்தளத்தில் இப்படி என்றால் பத்தாவது மாடியில் வேலுமணியின் அறையில் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களை தொடர்ச்சியாக முன்னாள் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ,உள்ளிட்டோர் சட்டசபை உறுப்பினர்களின் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களையும் காவல்துறையினர் உள்ளே விடவில்லை என்று தெரிகிறது. இது குறித்து வாக்குவாதம் நடைபெற்ற சமயத்தில் முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களின் மற்றும் காவல்துறையினர் சட்டசபை உறுப்பினர் விடுதிக்குள் அனுமதித்தார்கள்.

விடுதிக்குள் அனுமதித்தாலும் கூட எந்த ஒரு காரணத்தை முன்வைத்தும் யாரும் பத்தாவது மாடியில் இருக்கும் வேலுமணியின் அறைக்கு அருகே அனுமதிக்கப்படவில்லை. வேலுமணி இடம் பல ஆவணங்களை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.