இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்!

0
123
#image_title

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்!

இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றலாமே என்று கூறி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் வீரேந்தர் சேவாக் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் வையுங்கள் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் சேவாக்கை வெச்சு விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்து சேவாக் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசுகையில்,

என் என் தேசம். அதனால், என் தேசத்தை பாரத் என்று அழைக்க நான் விரும்புகிறேன். ஆனால், இதை அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. எந்த அரசியல்வாதிக்கும் நான் ரசிகன் கிடையாது.

எனக்கு எந்த அரசியல் கட்சியின் மீதும் ஆர்வம் கிடையாது. அப்படி எனக்கு ஏதேனும் அரசியல் கட்சி மீது விருப்பம் இருந்தால் இரண்டு கட்சியிலும் என்னை அழைத்தபோது நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருப்பேன். நான் எப்போதும் என் இதயத்திலிருந்து பேசுவேன். நான் பேசும் கருத்து அரசியல் நிலைபாடு கிடையாது. என்னுடைய விருப்பமெல்லாம் பாரத் என பெயரை வைப்பது தான்.

என்னை மட்டும் கேட்கிறீர்களே, காங்கிரஸ் கட்சி  பாரத் ஜோட யாத்ரா என்ற பெயரில் தான் நாடு முழுவதும் சென்று வந்தார்கள். இப்படி இருக்க ஏன் பலரும் பாரத் என்ற பெயரை நினைத்து பயப்படுகிறார்கள். நாடாளுமன்ற போட்டியைப் பொறுத்தவரை யார் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறட்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Previous articleமூக்கையாத்தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி !!
Next articleமாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!