இதெல்லாம் சரியில்லை மாத்திக்கோங்க.. அஜித்தின் கறார் பேச்சு!! திமுக வெளியிட்ட அதிரடி அறிக்கை!!
கலைஞர் ஆட்சியில் இருந்த பொழுது அவருக்காக பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அஜித் மிகவும் வெளிப்படை தன்மையுடன் பேசினார். இது நாளடைவில் இவர் எந்த மேடையிலும் ஏறாததற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. இந்த பாராட்டு விழாவிற்கு ரஜினி கமல் அஜித் என அனைவரும் கலந்து கொண்ட நிலையில், தனி தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டது.
குறிப்பாக எந்த இடத்திற்கு சென்றாலும் பிரியாமலிருக்கும் அஜித் ஷாலினிக்கு உட்கார நாற்காலிகள் கூட ஏற்பாடு செய்யவில்லை. இதுவே அவருக்கு மிகுந்த கோபத்தை அளித்தது. விழாவிற்கு வந்த அஜித்திற்கு மட்டும் முன்னெச்சரிக்கையாக நாற்காலிகள் பரிந்துரை செய்து வைத்திருந்த நிலையில், அவரது மனைவிக்கு அவ்வாறு எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. கலைஞரின் மனைவிதான் ஷாலினியை அருகில் அழைத்து உட்கார வைத்துள்ளார்.
இந்த நிலையில் மேடையில் ஏறி பேசிய அஜித் கருணாநிதியிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். திரையுலகிலிருந்து எந்த ஒரு திரை பிரபலத்தையும் அரசியல் நிகழ்ச்சிக்காக கட்டாயப்படுத்தி கூப்பிடக்கூடாது என்ற அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை அஜித் கூறிய உடனே அரங்கத்தில் இதற்கு பலரும் வரவேற்பளித்தனர். ஆனால் நாளடைவில் இதுவே அவருக்கு பல இடையூறுகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது.
அஜித் இவ்வாறு கூறியதும் இதைப் பற்றி எதுவும் தனது கருத்தை கூற முடியாமல் கருணாநிதி திக்கி திணறினார். இந்த நிகழ்ச்சி முடிந்த ஒரு சில நாட்களிலேயே அஜித்திற்கு கொடுத்த அழுத்தத்தால் மீண்டும் கருணாநிதியிடம் சென்று இதற்கு மன்னிப்பும் கேட்டார். அஜித் பேசிய விளைவானது தற்பொழுது திமுக நடத்திய பாராட்டு விழா வரை ஆழமாக பதிந்துள்ளது. சமீபத்தில் திமுக, கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில் பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. இதில் நாங்கள் எந்த ஒரு திரை பிரபலத்தையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவில்லை என்று அறிக்கையையும் வெளியிட்டது. இதற்கு அனைத்திற்கும் காரணம் அஜித் பேசியது தான் என்று பலரும் கூறுகின்றனர்.