இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் நாளை மோதவுள்ள 4 டெஸ்ட் போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
தற்போது இரு அணிகளும் 4 வது போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜடேஜா மீது செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்க வில்லை என்ற சர்ச்சை எழுந்து வந்தது. இதில் அவர் ஹிந்தியில் மட்டுமே பதிலளித்தார் ஆங்கிலத்தில் பதிலளிக்க வில்லை என்பதால் ஆஸ்திரேலியா அணியின் செய்தியாளர்கள் வெளியேறினார்கள் என்று சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ஜடேஜா செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது ஆஸ்திரேலியா அணி பத்திரிக்கையாளர்கள் மொழிமாற்று AI பயன்படுத்தி இருக்கலாம், மேலும் அவருக்கு நேரம் இல்லாததால் அவர் வேகமாக ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியவில்லை.
மேலும் இந்திய அணி வீரர்கள் குடும்பங்களுடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்கும் போது அவர்கள் வேகமாக செல்ல வேண்டும் இந்திய அணி பேருந்து தாமதமாகிவிடும் என்று கூறுகின்றது. ஆனால் இந்திய அணி வீரர்கள் சொகுசு கார்களில் தான் செல்வார்கள் இந்திய அணி இந்த விஷயத்தில் உண்மையை மறைத்து பொய் சொல்லி விட்டது என கூறியுள்ளார்.