பாமக தலைமையில் தான் கூட்டணி! 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பாமக தலைவர்!
கடந்த திங்கட்கிழமை அன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங்கை நேரில் சந்தித்தார். அவ்வாறு சந்தித்து, மக்களுக்கு தற்பொழுது வரை நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றி தரும் படி மனு கொடுத்தார். பின்பு அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை தர்மபுரி மொரப்பூர் ரயில்வே திட்டம் திண்டிவனம் , திண்டிவனம் நகரி ரயில்வே இணைப்பு திட்டம் திண்டிவனம் டு திருவண்ணாமலை அத்திப்பட்டு புத்தூர் சென்னை கடலூர் வரை உள்ள இணைப்பு திட்டம், ஈரோடு பழனி ரயில் இணைப்பு திட்டம் போன்றவை நிலுவையிலேயே உள்ளது.
இதனை குறித்த நேரத்தில் செயல்படுத்தினால் மக்கள் பெரிதும் பயனடைவர். அதனால் இது குறித்து தற்பொழுது மனு அளித்துள்ளேன். இந்த ஆண்டில் மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான நிதி கிடைத்துள்ளது. அதை வைத்து உரித்த நேரத்தில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். இதற்கடுத்து மத்திய ரயில்வே அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். அவரிடமும் தற்பொழுது நிலுவையில் உள்ள திட்டங்கள் பற்றி பேச இருக்கிறேன்.
மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெற போகும் நாடாளுமன்ற தேர்தலை முன்னோட்டமாக வைத்து அதற்கு அடுத்து வரும் 2026 ஆம் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைப்போம். அதேபோல பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைப்பதில் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் தற்போதைய நிலையை விட அதிக அளவு ஈடுபாடு காட்ட வேண்டும். மக்களின் விளைநிலங்களை பறித்து விமான நிலையம் அமைப்பதற்கு பதிலாக கல்பாக்கம் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று கூறினார்.