உடலில் உள்ள பல நோய்களை அதிக செலவு மற்றும் சிரமமின்றி குணமாக்கும் பாட்டி வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*இரத்தத்தை சுத்தப்படுத்தும் சுண்டைக்காய்
புரதம்,இரும்பு,கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கும் சுண்டைக்காயை உரலில் போட்டு இடித்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.வயிற்றில் புழு இருப்பவர்கள் சுண்டைக்காயை ஜூஸாக அரைத்து பருகி வந்தால் அவை அழிந்துவிடும்.
*இரத்த சோகையை குணமாக்கும் பேரிச்சம் பழம்
இரண்டு தேக்கரண்டி தேனில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.
*வயிற்றுப்போக்கை குணமாக்கும் சோம்பு
150 மில்லி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
*வயிற்றுவலியை குணமாக்கும் வெந்தயம்
பசு நெயில் வெந்தயத்தை வறுத்து பொடித்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி பிரச்சனை நீங்கும்.
*அல்சரை குணமாக்கும் பச்சைவாழை
தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் ஆறும்.குடல் ஆரோக்கியமாக இருக்க பச்சை வாழைப்பழம் சாப்பிடலாம்.
*சிறுநீரக பாதிப்பை சரி செய்யும் வெள்ளரி விதை
உங்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் நீங்கள் வெள்ளரி விதைகளை பொடித்து பாலில் கலந்து பருகி வரலாம்.
*வெடிப்பு புண்களை ஆற்றும் அரச இலை
மஞ்சள் தூள் மற்றும் அரச இலையை தண்ணீர் விட்டு அரைத்து வெடிப்பு புண்கள் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.
*வாயுத் தொல்லையை போக்கும் சீரகம்
ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடித்து தண்ணீரில் கலந்து பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
*உடல் உஷ்ணத்தை தணிக்கும் சின்ன வெங்காயம்
இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் நீங்கும்.
*வாந்தியை கட்டுப்படுத்தும் ஏலக்காய்
சம அளவு வெற்றிலை மற்றும் ஏலக்காயை எடுத்து இடித்து சாறு எடுத்து பருகி வந்தால் தொடர் வாந்தி கட்டுப்படும்.
*பித்த கோளாறை சரி செய்யும் கொத்தமல்லி
உடலில் அதிக பித்தம் இருப்பவர்கள் வர கொத்தமல்லி விதையை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம்.