ஒரு சில தளர்வுகள் உடன் இன்று முதல் இவை இயங்க அனுமதி!

Photo of author

By Kowsalya

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கில் மேலும் ஒரு சில துறைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் ஜூன் 7ம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு போடப்பட்டதால் கோயம்பேடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் காய்கறி பூ சந்தைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்த காய்கறி பூ சந்தைகளுக்கும் மட்டுமே அனுமதி கிடைத்த நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, விமானம் மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தொலைதொடர்பு, அஞ்சல் துறை ஊழியர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரத்த வங்கிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், உணவு வழங்கும் பணியை இ-பதிவு செய்து தங்களது பணிகளை மேற்கொண்டு செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் தவிர மற்ற மாவட்டங்களுக்கு 50 விழுக்காடு பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மளிகை கடை வியாபாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி மூலம் அனுமதி பெற்று குடியிருப்புகள் சென்று வாகனங்கள் அல்லது தள்ளு வண்டிகளில் மூலம் விற்பனை செய்யலாம். அல்லது தொலைபேசி ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை பதிவு செய்து டோர் டெலிவரி செய்யலாம், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.