நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்!
தற்போது ரயில் போக்குவரத்துத்துறை ரயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ரயில்வேயில் உள்ள வசதிகள் ,ரயில்வே இயக்கம் ,தொழில்நுட்பம் ,பாதுகாப்பு தொடர்பாக பயணிகளிடம் விளக்கம் அளித்து வருகின்றது.
மேலும் ரயில்வே தற்போது தந்துள்ள விவரத்தில் நாய் ,பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் ,விலங்குகள் ,பறவைகள் ,ரயிலில் எடுத்து செலவதற்காக எவ்வாறு வசதி உள்ளது என்பதை பற்றி விளக்கம் அளித்துள்ளது.
அதனையடுத்து ரயில்களில் யானை ,குதிரை ,கழுதை ,செம்மறி ஆடு ,நாய் உள்ளிட்ட பிற விலங்குகளையும் ஏற்றிச் செல்லலாம்.அவற்றை எவ்வாறு ஏற்றி செல்வது என்ற விவரங்களை அந்தந்த ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.மற்ற விலங்குகளை விட வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் உள்ள நாய்களை முதல் ஏசி வகுப்பிலும் ரயிலின் மேலாளரின் மேற்பார்வையின் கீழ் லக்கேஜ் மற்றும் பிரேக் வேனில் எடுத்து செல்ல பதிவு செய்ய வேண்டும்.
மேலும் பயணிகள் அவரவர்கள் பயணிக்கும் பெட்டியில் நாயை அழைத்து செல்ல ஏசி முதல் வகுப்பு கூபே தங்குமிடத்தை தனித்துவமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் பயணிகளின் டிக்கெட்டில் ஒரு நாய்க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் அதற்கான கட்டணம் வசூல் செய்யப்படும்.
மேலும் ரயில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திக்கு முன்பே நாயை லக்கேஜ் அல்லது பார்சல் அலுவலகத்திற்கு அழைத்து வர வேண்டும்.குறிப்பாக பொது பயணிகள் பெட்டிகளுக்கு நாயை அழைத்து செல்ல கூடாது.முறையாக முன்பதிவு செய்யப்பட்ட பிறகே அழைத்துவர வேண்டும்.
முன்பதிவு இல்லாமல் நாயை அழைத்து சென்றால் ஆறு மடங்கு லக்கேஜ் கட்டணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாய் எந்த ஒரு தொற்றினாலும் பாதிக்கப்படவில்லை என கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும் அப்போது தான் நாய் ரயிலில் அனுமதிக்கப்படும்.
மேலும் முன்பதிவு செய்யும் பொழுது தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.நாயை பாதுகாக்கும் முழு பொறுப்பும் நாயின் உரிமையாளர்களே தான்.நாய்க்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகளை சரியாக எடுத்து செல்ல வேண்டும்.
அதனை தொடர்ந்து ரயில்பெட்டிகளில் நாய்களை கூடைகளில் எடுத்துசெல்லலாம்.அதற்கு முறையாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.நாயை ரயிலில் ஏற்றுவதற்கு முன்பு நாயை வாய் காப்புடன் சரியாக சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.