கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பிய அல்லு அர்ஜுன்!!

0
101
Allu Arjun escaped from arrest!!
Allu Arjun escaped from arrest!!

ஹைதராபாத்: புஷ்பா-2 படம் பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகன் கூட்ட நெரிசலில் சிக்கினர். அதில் 35 வயது பெண் இறந்தார். மேலும் அவரது குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். மேலும் அவருக்கு ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனால் அல்லு அர்ஜுன் நிம்மதி அடைந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தெலுங்கு, தமிழ் உட்பட ஆறு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

இந்த படம் தற்பொழுது 2000 கோடி மேல் வசூல் செய்துள்ளது. இந்த படம் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஹிட்டான திரைப்படமாக அமைந்தது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி இறந்ததனால் அவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் வெளியில் வந்தார். இருப்பினும் உயர்நீதிமன்ற வழக்கு இடைக்கால ஜாமின் தொடர்பான ஆவணங்கள் சிறை அதிகாரிகளுக்கு உடனே சொல்லவில்லை காலத்தாமதம் ஏற்பட்டது. அதனால் ஒரு நாள் இரவு அல்லு அர்ஜுன் சிறையில் இருந்தார். அதற்குப் பிறகு டிசம்பர் 14ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அதுமட்டுமின்றி  ஒரு 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பாண்டு பத்திரங்கள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் அவர் பெரிய நிம்மதி கிடைத்தது. ஏனென்றால் கர்நாடக நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் நான்கு வாரம் காலத்துக்கு மட்டுமே இடைக்கால ஜாமீன் வாங்கி இருந்தார். இந்த இடைக்கால ஜாமின் காலம் முடிவடைவதால் அவர் மீது கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அல்லு அர்ஜுன் மீது வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் போலீசார் கைது நடவடிக்கையில் இருந்து முழுவதுமாக தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழகத்தில் இந்த மாதம் அரசு டாஸ்மாக் இரண்டு நாட்கள் விடுமுறை!!
Next articleஇந்திய அணி தலையில் விழுந்த பெரிய இடி.. பாதியில் வெளியேறிய பும்ரா!! நடந்தது என்ன??