ஏகப்பட்ட நன்மைகள் கொண்ட கற்றாழை சாறு!! இவர்கள் மட்டும் தப்பி தவறியும் குடிக்க கூடாதாம்!!

Photo of author

By Divya

ஏகப்பட்ட நன்மைகள் கொண்ட கற்றாழை சாறு!! இவர்கள் மட்டும் தப்பி தவறியும் குடிக்க கூடாதாம்!!

Divya

ஆலோ வேரா என்று அழைக்கப்படும் கற்றாழையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்திருக்கிறது.இந்த கற்றாழையை ஜூஸாக அரைத்து பருகினால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

கற்றாழை ஜூஸ் பயன்கள்:

1.தினமும் கற்றாழை ஜூஸ் பருகி வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறையும்.

2.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கற்றாழை ஜூஸ் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3.கண்களின் ஆரோக்கியம் மேம்பட கற்றாழை ஜூஸ் பருகலாம்.இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் வைக்க கற்றாழை ஜூஸ் பருகலாம்.

4.சருமம் தொடர்பான அனைத்துவித பாதிப்புகளும் குணமாக கற்றாழை ஜூஸ் பருகலாம்.காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

5.உடல் சூடு குறைய கற்றாழை ஜூஸ் செய்து குடிக்கலாம்.சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதம் கிடைக்க கற்றாழை ஜூஸ் செய்து குடிக்கலாம்.

கற்றாழை ஜூஸ் செய்முறை விளக்கம்:

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை மடல் – ஒன்று
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கற்றாழை மடலை செடியில் இருந்து பறித்து வந்து சிறிது நேரம் வைக்க வேண்டும்.

**கற்றாழை மடலில் இருந்து வரும் மஞ்சள் திரவத்தை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு ஒருமுறை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் அதன் தோல் நீக்கிவிட்டு ஜெல்லை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து இதில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் இந்த கற்றாழை ஜூஸை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்து கலக்கி பருக வேண்டும்.

கற்றாழை ஜூஸ் யார் பருகக் கூடாது தெரியுமா?

**கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கற்றாழை ஜூஸ் பருகக் கூடாது.

**அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க கூடாது.வயிறு பிடிப்பு,செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் தவிர்ப்பது நல்லது.தோல் அலர்ஜி,கண் எரிச்சல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் சாப்பிடக் கூடாது.