தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு!

0
154

தமிழில் ரிலீஸாகும் நயன்தாராவின் புதிய படம்… கலக்கலான போஸ்டர் வெளியீடு!

நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது அல்போன்ஸ் புத்ரன் கோல்டு என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். கதாநாயகனாக பிருத்விராஜ் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக கோல்ட் அமைந்துள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படம் ஓனம் பண்டிகை ஆன செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளை தற்போது படக்குழு தொடங்கியுள்ளது. இந்த படம் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து முதல் முறையாக கோல்டு படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை எஸ் சுப்பையா தமிழகத்தில் வெளியிட உள்ளார். இவர் மாநாடு திரைப்படத்தை வெளியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்போன்ஸ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழகத்தில் ஒரு திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. மலையாளத்தில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

Previous articleவிஜய் சேதுபதி- பொன்ராம் படத்துக்கு சன் பிக்சர்ஸ் குறித்திருக்கும் தேதி இதுதான்!
Next articleஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!