இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் மூன்றாவது போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் செய்தியாளர் சந்திப்பில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஸ்வின் ஓய்வு குறித்து தமிழக வீரர் பத்ரிநாத் கூறுகையில், இந்திய அணியில் தமிழக வீரர்களுக்கு அநீதி நடப்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். தொடர்ந்து இந்த தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அவர் ஓய்வு அறிவித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு முன் ஸ்ரீகாந்த் மற்றும் பல வீரர்களுக்கு இதுபோன்று திடீரென ஓரம் கட்டப்பட்ட நிகழ்வு நடந்தேறி உள்ளது. அஸ்வினுக்கும் அதுபோல இந்தத் தொடரில் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றிருந்தார்.