ஆல்யாவின் அழகான பெண் குழந்தை! வாழ்த்து மழையில் நனையும் காதல் தம்பதி..!!

Photo of author

By Jayachandiran

ஆல்யாவின் அழகான பெண் குழந்தை! வாழ்த்து மழையில் நனையும் காதல் தம்பதி..!!

Jayachandiran

ஆல்யாவின் அழகான பெண் குழந்தை! வாழ்த்து மழையில் நனையும் காதல் தம்பதி..!!

சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் டிவியின் ராஜாராணி சீரியல் தொடரில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட ஜோடி சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாகும்.

சீரியலில் நடித்த இவர்கள் உண்மையான காதல் ஜோடியாக வலம் வந்த நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் அசத்தும் வகையில் பிரம்மாண்டமாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து, ஆல்யமானசா கர்ப்பமான சூழலில் அவருக்கு சிறப்பான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் அந்த காதல் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது “குட்டி ஆல்யா” பிறந்துள்ளார் என்று கூறலாம். இதனை தனது இன்ஸ்டாகிராமில் ஆல்யா மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. “தாயும் சேயும்” நலமாக உள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் தேவை என்று கூறியுள்ளார்.

மேலும் சஞ்சீங் பப்பு குட்டிக்கு இன்னொரு பப்பு குட்டி வந்தாச்சு என்றும் குதூகலமாக பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடியை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.