யோகி பாபுவை நான் காமெடியனாக ஒத்துக் கொள்ள மாட்டேன்!

0
390
#image_title

பேட்டி ஒன்றில் யோகி பாபுவை பற்றி பேசிய இளவரசு. அவரது அற்புதமான நடிப்பை பார்த்து அவர் காமெடியன் மட்டும் இல்லை ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று அவர் கூறியுள்ளார்.

 

அவருடன் நடித்த சுவாரசியமான தகவல்களைப் பற்றி பகிர்ந்து உள்ளார் இளவரசு.

 

யோகி பாபுவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. யோகி என்ற படத்தின் மூலமா அறிமுகமானதால் அவர் பெயர் பாபு உடன் இணைத்து யோகி பாபு என்று அழைக்கப்பட்டார். விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற ஒரு ஷோவில் சிறு வேடங்களில் பிரபலமானவர் அவர்.

 

பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அவர் படத்தில் இருந்தாலே காமெடிக்கு குறைவிருக்காது. அவரது பாடி லாங்குவேஜ் அவரது டயலாக் டெலிவரி அனைவரையும் சிரிக்க வைக்கும்.

 

சிரிக்க வைப்பது மட்டுமில்ல , என்னால் உங்கை அழ வைக்கவும் முடியும் என்று மண்டேலா படத்தின் மூலம் தனது அற்புதமான நடிப்பை வெளி காட்டி இருப்பார் யோகி பாபு.

 

அது ஒரு குணச்சித்திர நடிகர் அவரால் காமெடி செய்யவும் முடியும். அவரால் மக்களை அழ வைக்கவும் முடியும். அவரது தோற்றமும் அவரது பாவனைகளும் மக்களுக்கு எளிதில் சிரிப்பையும் வரவைக்கும், அதேபோல் மனதை உருக்கும் நடிப்பில் அழவும் வைத்து விடுகிறார்.

 

பேட்டி ஒன்றில் இளவரசு யோகி பாபுவை பற்றி கூறியிருந்தார்.

 

யோகி பாபுவை நான் காமெடியனாக ஒத்துக் கொள்ள மாட்டேன். அவர் ஒரு நாள் யோகி பாபுவிடம் சொன்னாராம் , நான் உனக்கு ஐஸ் வைப்பதாகவே நினைத்துக் கொள், அடுத்த படத்தில் வாய்ப்பு கேட்கிறேன் என்று கூட நினைத்துக் கொள் என்ற உடனே யோகி பாபு என்னன்னா இப்படி சொல்றீங்க அப்படின்னு சொல்லி கேட்டாராம்,

 

 

மண்டேலா படத்தில் ஒரு காட்சி இருக்கும் அதில் ஒருவர் கல்லை எடுத்து அடிப்பார் ஆனால் அதில் நீ எழுந்து கொடுக்கும் நடிப்பில் ஒருவன் நிஜமாகவே தூங்கிக் கொண்டிருந்தால், அவன் மீது கல் எறியப்பட்டிருந்தால் உடனடியாக எழுந்திருக்கும் ஒருவன் எப்படி ரியாக்ஷன் செய்வானோ அந்த நடிப்பை நீ வெளிக்காட்டி இருப்பாய், அந்த சின்ன சின்ன ரியாக்ஷனில் கூட உனது நடிப்பை அவ்வளவு திறமையாக உள்ளது என்று புகழ்ந்தாரம்.. எனக்கு தெரியும் நீ நடிகன் தான் என்று நீ நடிக்கிறாய் தான் என்று, ஆனால் என்னையும் மீறி அந்த இடத்தில் நான் எமோஷனல் ஆகிறேன் என்றால் அதுதான் உன்னுடைய நடிப்பு திறமை என்று சொன்னாராம்.

 

 

.

Previous articleசிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!
Next articleஏறுமுகத்தில் தங்கம்..! இன்றைய விலை நிலவரம்..!!