சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

0
206
#image_title

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.

 

நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

 

தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் ஆண்டு கதை வசனம் எழுதினார். அதில் எம்ஜிஆர் சரோஜாதேவி ஆகியோர் நடித்திருந்தனர்.

 

தொடக்கத்தில் நாடகங்களில் எழுதுவது போல திரைப்படங்களிலும் பேரா பேராவாக வசனங்களை எழுதி இருந்தாராம் . கதை வசனம் எழுதிய பிறகு RMV அதை பார்த்து திருத்தல் செய்து பிறகு தான் நடிகர்கள் பேசுவார்களாம். அதனால் ஆரம்பத்தில் இவருக்கு ஒரு மன இருடலாகவே இருந்துள்ளது.

 

அதன் பின் தான் நாடகங்களில் எழுவதுபோல திரைப்படங்களில் இந்த மாதிரி எழுதக்கூடாது என்பதை கற்றுக் கொண்டாராம். அதேபோல் தான் எழுதிய ஒரு பேரா செய்தியை ஒரே வரியில் திருத்தம் செய்து கொடுத்தவிட்டாராம் RMV, அவரது திறமையை கண்டு கே பாலச்சந்தர் மிகவும் ஆச்சரியப்பாட்டராம். அதன் பிறகு தான் எப்படி கதை வசனம் சுருக்கமாக எழுதுவது என்பதை பற்றி கற்றுக் கொண்டாராம்.

 

அதே ஆண்டில் டிசம்பர் மாதம் வெளிவந்த நீல வானம் சிவாஜிகணேசன் மற்றும் தேவிகா அவர்களின் அற்புதமான நடிப்பில் கதை வசனம் எழுதினார் கே பாலச்சந்தர். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

சிவாஜி கணேசன் படத்திற்கு முதல் முதலாக கே பாலச்சந்தர் எழுதிய வசனம் மற்றும் கதை இதுதான். இந்த பெரும் தேவிகா மற்றும் சிவாஜி கணேசன் அவர்களின் அற்புதமான நடிப்பில் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.

 

இந்தக் கதை ஏன் இப்பொழுது வருகிறது என்றால் நீலவானம் படம் 59 ஆண்டு கடந்து 60 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்றளவும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அந்த அளவு இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது என்று கூறலாம்.