வித்தியாசம், வித்தியாசமாக போஸ் கொடுத்த அமலா பால்.!! குழம்பிய ரசிகர்கள்.!!

0
70

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை அமலாபால் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமலாபால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் குறைந்த பட்ஜெட் மலையாளத் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ‌.

https://www.instagram.com/p/CViR08Jv_fQ/?utm_medium=copy_link

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை அமலாபால் அவ்வப்போது போட்டோஷூட் களை நடத்தி புகைப்படம் வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது வித்தியாசம் வித்தியாசமாக உட்கார்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்ன போஸ் இது என்று கமெண்ட் செய்தும், கலாய்த்து வருகின்றனர்.‌

https://www.instagram.com/p/CViSCQdP14b/?utm_medium=copy_link