சுத்தமாக வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு செல்லும் அமலா பால்? வெளியான தகவல்!

0
69

சுத்தமாக வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு செல்லும் அமலா பால்? வெளியான தகவல்!

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவரின் முதல் படம் சர்ச்சைகளைக் கிளப்பிய சிந்து சமவெளி. ஆனால் அதன் பின்னர் திறமையான நடிகை என்ற பெயரை மைனா மூலமாக பெற்றார்.

அந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தன் திறமைகளை காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

தெய்வ திருமகள் மற்றும் தலைவா படத்தின் போது இயக்குனர் ஏ எல் விஜய்யோடு காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த மண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கூடுதல் கவர்ச்சியோடு பல படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் முன்னர் போல இப்போது வாய்ப்புகள் அவருக்கு இல்லை.

இந்நிலையில் இப்போது அவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 6 ல் ஒரு போட்டியாளராக செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.