நண்பனுக்காக கொள்கையை கைவிட்ட சந்தானம்… விரைவில் வருகிறது பாஸ் என்கிற பாஸ்கரன் – 2!

0
89

நண்பனுக்காக கொள்கையை கைவிட்ட சந்தானம்… விரைவில் வருகிறது பாஸ் என்கிற பாஸ்கரன் – 2!

ஆர்யா சந்தானம் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆன சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் இப்போது மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடிப்பதில்லை. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

தற்போது அவர் மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்போது சந்தானம் மீண்டும் மற்றொரு கதாநாயகனோடு சேர்ந்து நடிக்க உள்ளார்.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இப்போது இயக்குனர் எம் ராஜேஷ் இறங்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சந்தானத்தையும் ஒரு ஹீரோவாக்கி அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளாராம். அதனால் இந்த படத்தில் நடிக்க சந்தானம் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.