பிகினிக் உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்!

Photo of author

By Divya

பிகினி உடையில் கையில் பாட்டிலுடன் கோவா ஓபன் பாரில் அமலாபால்!

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் அமலாபால் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘மைனா’ படம் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தது.இதனால் விஜய்,தனுஷ்,ஜெயம் ரவி,விக்ரம்,சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து.

ஒரு கட்டத்தில் தமிழ் திரைத்துறையில் பீக்கில் இருந்த இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டனர்.இதனை தொடர்ந்து அமலாபால் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் அமலாபால் அதனை மறுத்துவிட்டார்.இதையடுத்து இவர் தமிழில் ஆடை என்ற படத்தில் நடித்தார்.இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது.இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கிய இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரமித்தது.தற்பொழுது 3 படங்கள் கைவசம் வைத்துள்ள இவர் தனது ஓய்வு நேரத்தில் பயணிம் செய்வதை விருப்பமாக கொண்டுள்ளார்.

அதன்படி கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இவர் அங்கிருந்து தன்னுடைய வித விதமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர் பிகினி உடையில் அங்கு இருக்கின்ற ஓபன் பாரில் பீர் குடிக்கும் போஸில் இருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்து அமலாபாலுக்கு செம்ம தில்லு தான் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.