மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ!
தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளும் பல கல்வி நிறுவனங்களும் இதனை வைத்து சம்பாதித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்ற மாணவி 104 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இவர் வெற்றி பெற்றதற்கு அண்ணாமலை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவ்வாறு பாராட்டிய பொழுது, அண்ணாமலை வேறொரு பக்கம் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு அருகில் இருந்த அமர் பிரசாத் அந்த மாணவியை அண்ணாமலை காலில் விழும்படி கண் மூலம் சைகை காட்டினார். அந்த மாணவியும் அந்த சிக்னலை புரிந்து கொண்டு அண்ணாமலை காலில் விழுந்தார்.
ஒன்றும் தெரியாதது போல் அண்ணாமலை, என் காலில் எல்லாம் விழக்கூடாது. நீங்கள் படித்து தான் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் இவ்வாறு ஊடகம் முன் கூறினார். ஊடகம் இருப்பதை மறந்து அமர் பிரசாத் மற்றும் அண்ணாமலை செய்த நாடகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இந்த வீடியோவை வைத்து தற்பொழுது பலரும் விமர்சித்து வருகின்றனர். இணையதள பக்கம் சென்றாலே அமர் பிரசாத்தின் வீடியோ பல கோணங்களில் ட்ரோல் செய்திருப்பதை நம்மால் காண முடிகிறது. இவ்வாறான ட்ரோலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.