இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Photo of author

By Parthipan K

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Parthipan K

Amazing Bharatnatyam of Asami who is mixing the internet!!

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில்  மது அருந்தி  விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம்  வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது.

சேலம் மாவட்டத்திற்கு செல்லும்  வழியான குமாரபாளையம் என்ற ஊரில்  அதிக அளவில்  மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார்.

இவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று அறியாமல் சாலையில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தார்.

போதையில் இருத்த அந்த ஆசாமி, சுவாமி பாடலுக்கு பரத நாட்டியம் ஆடினார்.அங்குள்ளவர்களிடம்  கலவரங்களிலும் ஈடுபட்டார்.

அவர் இருக்கும் வழியாக  ஏதேனும் நபர்கள் யாராவது சென்றால் அவர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அதனோடு பள்ளி செல்லும் மாணவர்களிடமும் நடனம் ஆடி ரகளை செய்தார்.

இதனால் அங்கு பரபரப்பாக ஒரு கூட்டமே கூட தொடங்கியது. அதனை பலர் சுற்றி நின்று பார்த்த படி இருந்தனர்.  அங்கு இருத்த சிலர் இதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்தனர்.

தற்பொழுது இந்த வீடியோவானது சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக சாலையில் திரிந்த அந்த ஆசாமியை கண்டிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர்.