ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு!!! நடப்பு சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வி!!! 

0
36
#image_title
ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு!!! நடப்பு சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வி!!!
நேற்று(அக்டோபர்15) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் அபாரமான பந்துவீச்சின் மூலம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேற்று(அக்டோபர்15) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் அரைசதம் அடித்து 80 ரன்கள் சேர்த்தார். இக்ரம் அலிகில் அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணியில் அதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கேட்டுகளையும் கைப்பற்றினர். டாப்லி, லிவிங்ஸ்டன், ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
285 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேரிஸ்டோ விக்கெட்டை கைப்பற்றி ஃபசல்ஹக் பரூகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய ஜெ ரூட் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டேவிட் மாலன் சிறிது தாக்குபிடித்து 32 ரன்கள் சேர்த்தார்.
இறுதி வரை பொறுமையாக விளையாடிய ஹேரி பிரூக் அரைசதம் அடித்து 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாமல் போனது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசி முஜீபுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர். மேலும் முகமது நபி சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் அணி இந்த தொடரில் இரண்டாவது தோல்வியை பெற்றது.