கேஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய் மட்டும் தான்!!! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் மகிழ்ச்சியில் குடும்பத் தலைவிகள்!!!

0
27
#image_title
கேஸ் சிலிண்டரின் விலை 400 ரூபாய் மட்டும் தான்!!! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் மகிழ்ச்சியில் குடும்பத் தலைவிகள்!!!
எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் கேஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் தற்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடும் பணியிலும் தேர்தலுக்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் அவர்களின் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தெலுங்கான மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரத ராஷ்டிர சமிதி கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று(அக்டோபர்15) வெளியிட்டது.
பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வருமான சந்திரசேகர ராவ் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் “தெலுங்கானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் தகுதி இருக்கும் பயனாளிகளுக்கு 400 ரூபாய்க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும். சிலிண்டரின் மீதித் தொகையை அரசு ஏற்றுக் கொள்ளும்.
வறுமைக் கேட்டுக்கு கீழ் வசிக்கும் 93 லட்சம் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையை அரசு செலுத்தும். ஆரோக்கிய ஸ்ரீ என்ற திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார காப்பீடு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக மாதம் மாதம் வழங்கப்பட்டு வரும் 2016 ரூபாயானது அடுத்த 5 ஆண்டுகளில் 5000 ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் இந்த தகை முதல் ஆண்டில் 3016 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதே போலீஸ் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 4016 ரூபாய் அடுத்த 5 ஆண்டுகளில் 6016 ரூபாயாக உயர்த்தப்படும்.
முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு ஒரு முறை 10000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இது அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 16000 ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களுக்குள் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடுவோம். மின்சார பயன்பாட்டிலும், தனிநபர் வருமானத்திலும் தெலுங்கானா மாநிலம் முதன்மை மாநிலமாக உருவெடுத்து இருக்கின்றது” என்று கூறினார்.