வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
230
#image_title

வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு என்று அழைக்கப்படும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த இந்த பதிவில் அருமையான கசாயத்தை தயார் செய்து அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்தும் கசாயத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* கருங்குறிஞ்சி சூரணம்

* சுக்கு சூரணம்

* காஞ்சோரி சூரணம்

* தேவதாரி சூரணம்

 

இந்த கசாயத்தை எவ்வாறு தயார் செய்வது…

 

* முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து 300 மிலி தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

* பிறகு இதில் கருங்குறிஞ்சி செடியின் சூரணம் 2 கிராம் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் காஞ்சோரி சூரணம் 2 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவதாரி கட்டையின் சூரணமும் இதில் 2 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக சுக்கின் சூரணம் 2 கிராம் அளவு சேர்க்க வேண்டும்.

 

* சூரணங்கள் சேர்த்துள்ள இந்த தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 300 மிலி தண்ணீரானது 100 மிலி அளவு வரும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதை இறக்கி வடிகட்டி வெதுவெதுப்பாக வந்த பிறகு குடிக்கலாம்.

 

இந்த கசாயத்தை தயார் செய்து குடிப்பதால் நரம்பு சுருட்டல் நோய் குணமாகும். இது மட்டுமில்லாமல் முதுகில் ஏற்படும் சவ்வு விலகலையும் இது குணப்படுத்தும்.