அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முதன்மை இடத்தில் இருப்பது மாதுளை தான்.இந்த மாதுளை பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.ஆனால் மாதுளம் பழத்தை விட அதன் தோலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.
இந்த மாதுளை பொடியை நீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் தேங்கிய கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
மாதுளை பானம் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
1)மாதுளை தோல் பொடி – இரண்டு ஸ்பூன்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
4)தேன் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு மாதுளம் பழத்தின் தோலை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிறகு அதை வெயிலில் காய வைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
மாதுளை தோல் பொடி செய்ய முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மாதுளை தோல் பொடி வாங்கிக் கொள்ளலாம்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
பிறகு அரைத்த மாதுளை பொடி இரண்டு தேக்கரண்டி,ஏலக்காய் தூள் கால் தேக்கரண்டி,மஞ்சள் தூள் சிட்டிகை அளவு சேர்த்து கொதிக்க விடவும்.இரண்டு டம்ளர் தண்ணீர் சுண்டி ஒரு டம்ளர் தண்ணீராக வரும் வரை கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.
பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் இதயம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.இரத்தத்தில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.வாய் துர்நற்றம்,பல் ஈறு தொடர்பான பாதிப்புகள் குணமாக மாதுளை தோல் பொடி உதவுகிறது.