குறட்டையை குறைக்க உதவும் அற்புத ட்ரிங்க்! ஒருமுறை குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

குறட்டையை குறைக்க உதவும் அற்புத ட்ரிங்க்! ஒருமுறை குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும்!!

நாசி மற்றும் தொண்டை வழியாக சுவாசிப்பதால் குறட்டை சத்தம் ஏற்படுகிறது.உடல் பருமன்,நாசி மற்றும் தொண்டை கோளாறு,தூக்கமின்மை போன்ற காரணங்களாலே குறட்டை ஏற்படுகிறது.இதை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம் – 100 கிராம்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
5)மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
6)சுண்டைக்காய் – 1/4 கப்

செய்முறை:-

முதலில் 100 கிராம் சின்ன வெங்காயம் எடுத்து தோல் நீக்கி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு அகலமான கடாய் எடுத்து அதனுள் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும்.பின்னர் இதை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.இதை தொடர்ந்து நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்க வேண்டும்.

அடுத்து 1/4 கப் சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி வதங்கி கொண்டிருக்கும் வெங்காய கலவையில் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அதன் பிறகு அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்,அரை தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.அவ்வபோது தண்ணீர் தெளித்து வதக்கவும்.இவ்வாறு குறைவான தீயில் 15 வதக்கி எடுக்கவும்.

சுண்டைக்காய் நன்கு வெந்து வந்த பின்னர் சிறிதளவு தூள் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.இந்த சுண்டைக்காய் பிரட்டலை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் குறட்டை சத்தத்திற்கு தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு சின்ன துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.தொடர்ந்து இடித்த இஞ்சியை அதில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகி வந்தால் குறட்டை சத்தத்திற்கு தீர்வு கிடைக்கும்.