தலைமுடியை மளமளவென வளர வைக்கும் அற்புத “மூலிகை எண்ணெய்” – தயார் செய்வது எப்படி?

0
95
#image_title

தலைமுடியை மளமளவென வளர வைக்கும் அற்புத “மூலிகை எண்ணெய்” – தயார் செய்வது எப்படி?

நவீன கால வாழ்க்கை முறையில் நாம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.அதில் ஒன்று முடி உதிர்தல் பிரச்சனை.இதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்,முறையற்ற தூக்கம்,மன அழுத்தம் உள்ளிட்டவை முக்கிய காரணங்காளாக சொல்லப்படுகிறது.அதிகப்படியான ரசாயனம் நிறைந்த ஷாம்புகளை தலைக்கு பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு பாதிப்பு அதிகமாகிறது.இதற்கு மூலிகை எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும்.இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்ப்பதன் மூலம் முடி கருப்பாகவும்,அடர்த்தியாகவும் வளரும்.

தேவையான பொருட்கள்:-

*வேப்பிலை – 1 கப்

*மருதாணி இலை – 1/2 கப்

*கருவேப்பிலை – 1கப்

*செம்பருத்தி இலை – 1 கப்

*செம்பருத்தி பூ – 8

*சின்ன வெங்காயம் – 10

*பெரு நெல்லி – 2(பொடியாக நறுக்கியது)

*வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி – 1 1/2 தேக்கரண்டி

*வெந்தயம் – 2 தேக்கரண்டி

*சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

செய்முறை:-

இரும்பு கடாய் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும்.பிறகு அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

அவை சூடேறியதும் கருவேப்பிலை,வேப்பிலை,மருதாணி இலை,செம்பருத்தி இலை சேர்த்து பொரிய விடவும்.

அதன் பின் செம்பருத்தி பூ,நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பெரு நெல்லி சேர்க்கவும்.

தொடர்ச்சியாக வெந்தய விதை 2 தேக்கரண்டி மற்றும் கரிசலாங்கண்ணி 2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை 2 நாட்கள் வரை வைத்திருந்து பிறகு அதில் உள்ள கசடுகளை நீக்கி விட்டு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளவும்.இதை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி அடர் கருப்பாகவும்,நீளமாகவும் வளரும்.

Previous articleமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!!
Next articleஅடிபட்டு ஏற்படும் இரத்தக்கட்டு!!! இதை சரி செய்ய உதவும் 5 டிப்ஸ்!!!