தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் புட் சேஃப்டி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள System Analyst cum DataManager பணிக்கு என்று 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருபவர்கள் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: உணவு பாதுகாப்பு துறை
வேலை வகை: System Analyst cum DataManager
காலிப்பணியிடங்கள்: System Analyst cum DataManager பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் படிப்பு,கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
System Analyst cum DataManager பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
1)நேர்காணல்
2)சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
System Analyst cum DataManager பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://foodsafety.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28-11-2024 விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.