M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
272
Amazing job in Madurai Kamaraj University for M.Sc graduates!! Apply by 22nd April!!
Amazing job in Madurai Kamaraj University for M.Sc graduates!! Apply by 22nd April!!

M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

பதவி:

*Junior Research Fellow

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*இப்பணிக்கு Interview (நேர்காணல்) மூலம் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

கடைசி தேதி: 22.04.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழி வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபைசா செலவு இன்றி தலையில் உள்ள பொடுகை நீக்க இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்!!
Next articleவிந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!