விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

0
130
Want to increase sperm count? Eat these foods!!
Want to increase sperm count? Eat these foods!!

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

ஒரு சில ஆண்களுக்கு தவறான சில பழக்க வழக்கங்களால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அவ்வாறு உடலில் விந்தணுக்கள் குறைவாக இருக்கும் ஆண்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதே போல விந்தணுக்களின் வீரியமும் அதிகரிக்கும். அது எந்தெந்த உணவுகள் என்று பார்க்கலாம். 

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள்… 

  1. முட்டை

ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முட்டையை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். முட்டையில் புரதச்சத்தும், வைட்டமின் ஈ சத்தும் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் விந்தணுக்களின் இயக்கத்தையும் மேம்படுத்துகின்றது. 

  1. பூசணி விதைகள்

ஆண்கள் அனைவரும் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூசணி விதைகள் இனப்பெருக்க காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும். பூசணி விதைகளில் ஆன்டிஆக்சிடன்ட்கள், பைட்டோஸ்டெரால்கள்,அமினோ அமிலங்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். 

  1. கேரட் 

கேரட்டில் பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளது.இந்த பீட்டா கரோட்டின் சத்துக்கள் உங்களுடைய விந்தணுக்களை ஃப்ரீரேடிக்கல்களால் சேதமடையாமல் தடுக்க உதவும் ஆக்சிஜனேற்றமாக செயல்படுகின்றது. கேரட்டை நாம் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

4. அக்ரூட் பருப்பு

அக்ரூட் பருப்பை சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய உடலில் குறைவாக இருக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அக்ரூட் பருப்புகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றது. இதனால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்துகின்றது. 

  1. டார்க் சாக்லேட் 

உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகளில் டார்க் சாக்லெட்டும் முக்கிய. உணவாக இருக்கின்றது.டார்க் சாக்லேட்டில் வைட்டமின் சி,லைகோபீன் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் விந்தணுக்களின் இயக்கத்தையும் மேம்படுத்தும்.