கண் நோய்களை சுலபமாக போக்கும் அற்புத மருந்து!! இதை ஒருமுறை பயன்படுத்தினால் போதும்!

Photo of author

By Divya

கண் நோய்களை சுலபமாக போக்கும் அற்புத மருந்து!! இதை ஒருமுறை பயன்படுத்தினால் போதும்!

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில் நாம் அனைவரும் நம் கண் பார்வையை கூர்மையாக வைத்துக் கொள்வது,கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற விஷயங்களில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

தூங்கி எழுந்ததும் கண்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் கண்களில் படிந்து கிடக்கும் அழுக்குகள் நீரில் அடித்துக் கொண்டு வெளியேறும்.அதேபோல் வெளியில் சென்று வந்தால் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

கண்களை மசாஜ் செய்வது,அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்களை உட்கொள்வது,கண்களுக்கு தேவையான ஓய்வு குடுப்பது போன்ற விஷயங்களை செய்து வருவதன் மூலம் வயது முதுமையில் ஏற்படக் கூடிய கண் தொடர்பான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.

ஆனால் கண்களை முறையாக பராமரிக்க தவறினால் கண் எரிச்சல்,வலி,கண் பார்வை மங்குதல்,கண் கட்டி,வீக்கம்,கண் சூடு உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இது போன்ற கண் பாதிப்புகளில் இருந்து மீள இந்த வீட்டு வைத்திய குறிப்பு தங்களுக்கு உதவும்.

1)மரமஞ்சள்
2)படிகாரம்

10 கிராம் மரமஞ்சளில் ஒரு தேக்கரண்டி படிகாரத் தூள் சேர்த்து குளிர்ந்த நீரில் கலக்கவும்.இந்த நீரை கொண்டு முகத்தை கழுவினால் கண் எரிச்சல்,கண் சூடு பாதிப்பு குணமாகும்.

1)சந்தனம்
2)பன்னீர்

ஒரு தேக்கரண்டி சந்தன தூளில் ஒரு தேக்கரண்டி பன்னீர் விட்டு பேஸ்ட் போல் குழைத்து கண்களை சுற்றி அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் கண் சூடு,கண் கட்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

1)தேங்காய் எண்ணெய்
2)நெல்லெண்ணய்

இந்த இரண்டு எண்ணையை சம அளவு எடுத்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் அரிப்பு,கண் எரிச்சல் நீங்கும்.

1)இஞ்சி
2)வெல்லம்

ஒரு துண்டு இஞ்சியை இடித்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க விடவும்.பிறகு அதில் சுவைக்காக சிறிது வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் கண் வலி குணாகும்.