கண் குறைபாட்டை நிற்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கின்றது. எல்லாரும் செல்போன் உபயோகிப்பது, அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இதனால் சிறிய குழந்தைகளுக்குமே இப்போது கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காமல் இருப்பது, விட்டமின் ஏ, சி போன்றவைகள் குறைவது இன்னும் பல காரணங்களால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளது. இந்த வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய் கடுக்காய் பொடி
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க நெல்லிக்காய் மற்றும் கடுக்காயை பொடி செய்து சாப்பிட்டு வர வேண்டும்.
இதற்கு நெல்லிக்காய்களை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் ககடைக்கும் கடுக்காயையும் வாங்கி அதில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு பிறகு இரண்டையும் வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு அதனை பொடி செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நெல்லிக்காய் கடுக்காய் பொடியை எப்பொழுது சாப்பிட வேண்டுமென்றால் தினமும் இரவு உணவு உண்ட பிறகு நெல்லிக்காய் கடுக்காய் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அதனுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாள் இந்த பொடியை சாப்பிட்டு வரவேண்டும்.
இதை செய்வதன் மூலம் உங்களது பார்வை தெளிவாகும். ஏற்கனவே கண்ணாடி போட்டவர்களுக்கு பார்வை குறைபாடு அதிகமாகாது.
கண்பார்வையை அதிகரிக்க இன்னொரு வழிமுறை
தேவையான பொருட்கள்
பாதாம் – 15
பிஸ்தா – 10லிருந்து 12
சோம்பு – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 2
கற்கண்டு – இ
செய்முறை
தேவையான பாதம், பிஸ்தா, கற்கண்டு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை காற்று புகாத ஜாரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒரு ஸ்பூன் பொடியை நன்கு காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கலாம். இதையும் 48 நாள்கள் தினமும் இரவு குடித்து வர வேண்டும். இந்த பொடியினை ஒரு வாரம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தயார் செய்ய வேண்டும்.
கண் பார்வை பிரச்சனையை போக்க மற்ற வழிமுறைகள்
* கண்பார்வையை அதிகரிக்க தினமும் நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.
* பப்பாளி பழத்தில் விட்டமின் சி இருப்பதால் அதையும் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
* மீன் சாப்பிடுவதால் கண்களுக்கு தேவையான விட்டமின் கிடைக்கின்றது. ஆகையால் மீன்களில சால்மன் மீன்களை சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது.
* கண்பார்வைக்கு சக்கரவல்லி கிழங்கை சாப்பிடுவதும் சிறந்த பலனை கொடுக்கும்.
* வாரம் இரண்டு முட்டைகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் முட்டையில் அதிக அளவு சல்பர் உள்ளது. இந்த சல்பர் கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
* கேரட்டை பச்சையாக அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வை குறைபாட்டை நீக்கி கண்களின் பார்வையை அதிகரிக்கின்றது.
* கண்களின் பார்வையை மேம்படுத்த தினமும் காலையில் எழுந்தவுடன் கண்களின் மேல் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.
* சர்வாங்காசனம் என்னும் ஆசனத்தை தினந்தோறும் செய்ய வேண்டும். இது கண்களின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.