நடக்க முடியாதவர்களை மின்னல் வேகத்தில் ஓட வைக்கும் அற்புத பால்!! இதை தயாரிப்பது எப்படி?
உங்கள் உடல் எப்பொழுதும் சோர்வாக இருக்கிறது என்றால் அதை அலட்சியம் கொள்ளாமல் அதற்கான தீர்வை காண முயலுங்கள்.உடலில் நோய்,அதிகப்படியான வலி,சோம்பல் வாழ்க்கை ஆகியவை உடலை சோர்வாக வைக்க கூடியவை.
அதேபோல் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்.இந்த உடல் சோர்வால் நிற்க மற்றும் நடக்க மிகவும் சிரமமாக இருக்கும்.எனவே உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இயங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பாலை குடித்து வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)வேர்க்கடலை
2)கோதுமை
3)மூக்கு கடலை
4)பார்லி
5)மக்காச்சோளம்
6)வால்நட்
7)முந்திரி
8)தேங்காய் பால்
9)வெள்ளை கற்கண்டு
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் வேர்க்கடலை,கோதுமை,மூக்கு கடலை,பார்லி,மக்காச்சோளம்,வால்நட்,முந்திரி ஆகிய அனைத்தையும் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.பின்னர் இந்த பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அரைத்து வடிகட்டி வைத்துள்ள சாற்றை ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் சுவைக்காக சிறிது வெள்ளை கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இயங்கும்.மேலும் இந்த எனர்ஜி மில்க் இரத்த சோகை,மூட்டு வலி,கை கால் வலி,உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும்.