இதை தடவினால் போதும்! இளநரையை நிரந்தரமாக கருமையாக மாற்றக்கூடிய அற்புத எண்ணெய்!

0
182

இப்பொழுது சிறியவர்கள் முதல் இளநரை வந்துவிடுகின்றன. காரணம் முடியை நன்கு பராமரிக்காமல் இருப்பது தான். சிறியவர்களுக்கு இளநரை வருவது ஒருசில உணவுப் பழக்கங்களால் அல்லது ஹார்மோன்களால் நடைபெறுகின்றது. இளநரையை போக்கி வெள்ளையான முடியை கருமையாக மாற்றும் இயற்கை யான எண்ணெய் தான் நாம் என்ன தயார் செய்யப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. தேங்காய் எண்ணெய்

2. நெல்லிக்காய் பொடி

3. அவுரி இலை பொடி

4. வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி

5. கறிவேப்பிலை பொடி

செய்முறை:

1. இது ஒரு Double boiling முறையில் செய்ய வேண்டும்.

2. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

3. அதன்பின் அதற்கு மேல் இன்னொரு பாத்திரத்தை வைத்து சுத்தமான தேங்காய் எண்ணெயை 250 மில்லி ஊற்றவும்.

4. இதில் ஒரு ஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடியை போடவும்.

5. பின் அவுரி இலை பொடியை ஒரு ஸ்பூன் போடவும். அவுரி இலை பொடியானது அனைவரும் தவறாக புரிந்து கொண்டு வெவ்வேறு பொடியை விற்று வருகிறார்கள். அதனால் சரியான அவுரி இலை பொடியை வாங்கி பயன்படுத்துங்கள்.

6. ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளை கரிசலாங்கண்ணி பொடியை போடவும். பிரிங்கராஜ் பொடி என்று கூறுவார்கள்.

7. ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடியை போடவும்.

8. நன்கு கலந்து விடவும்.

9. இது டபுள் பாய்லிங் முறையில் பத்து நிமிடம் நன்றாக மிதமான தீயில் வைத்து காய வைக்கவும்.

10. பின் அந்த எண்ணெயில் வேறொரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

11. இதனை அப்படியே இரண்டு நாட்களுக்கு விட்டுவிடலாம்.

12. அதன்பின் பார்த்தால் எண்ணெய் நன்றாக நிறம் மாறி இருக்கும்.

13. வடிகட்டி இந்த எண்ணெயை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

 

இதை தினமும் தடவி வர 15 நாட்களுக்கு உங்கள் தலைமுடி கருமையாக மாறுவதை காணலாம். இந்த எண்ணெயை நன்றாக மயிர் கால்களில் படும்படி தேய்த்து விடவேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் முன் எண்ணையை தடவி விட்டு காலையில் தலையை கழுவிக் கொள்ளலாம் அல்லது கொஞ்சமாக வெளியே செல்லும்போதும் தடவிக் கொள்ளலாம். நறுமணம் நன்றாகவே இருக்கும்.

 

 

 

 

Previous articleஒரு வாரம் இந்த டானிக்கை குடித்தால் கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகிவிடும்!
Next articleகொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை திருடுவதற்கு முயற்சி – மைக்ரோ சாப்ட் நிறுவனம் திடுக்கிடும் தகவல்!