12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!

Photo of author

By Divya

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!

தமிழ்நாடு காவல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போட்டர் பணிக்காக 54 காலிப்பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை(காவல் துறை)

பணி: ஜூனியர் ரிப்போட்டர்

பணியிடம்: தமிழகம் முழுவதும்

காலிப்பணியிடங்கள்: 54

கல்வி தகுதி: ஜூனியர் ரிப்போட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,200/- முதல் ரூ.1,14,800 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்கு 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

*திறன் தேர்வு

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

ஜூனியர் ரிப்போட்டர் பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவண நகலுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 15-04-2024