தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு!
கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது.
மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம் அகவிலைப்படையை பெற தகுதி பெற்றனர். இந்நிலை மத்திய அரசு அடுத்த சில தினங்களில் அகவிலைப் படி மற்றும் அகவிலை நிகவாரணம் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியீடு என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படையானது வழங்கப்பட்டு வருகிறது.
மீண்டும் நான்கு சதவீதம் உயர்த்தி 42 சதவீதமாகவும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 12,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் , முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ 18000 ,ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.