திருப்பூரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் அசத்தல் வேலை! 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதி!

Photo of author

By Divya

திருப்பூரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் அசத்தல் வேலை! 10 ஆம் வகுப்பு தான் கல்வித் தகுதி!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சைனிக் பள்ளியானது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பணி,தகுதி குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: சைனிக் பள்ளி(திருப்பூர்)

பணி: வார்ட் பாய்ஸ்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வார்ட் பாய்ஸ் பணிக்கு விண்ணப்பம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 மற்றும் அதிகபட்சம் 50 வயது என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

1)எழுத்து தேர்வு

2)சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் www.sainikschoolamaravahinagar.edu.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு கேட்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.300/-

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30-04-2024