10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

0
168

ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் அமேசான் முக்கியமான ஒன்றாகும். தற்போது உலகளவில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.இதற்கிடையில் உலகின் பல முண்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியப்பின்,பாதி பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.அதே போல மெட்டா நிறுவனத்திலும் சுமார் 11 ஆயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த பாணியை அமேசானும் கையில் எடுத்துள்ளது. அமேசானில் பணியாற்றும் 10,000 ஆயிரம் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததாக அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.இது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 3 சதவீதமானவர்கள் ஆகும்.

கடந்த 20 ஆண்டுகளில் அமேசான் எடுத்த இந்த பணிநீக்கமே பெரியதாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர், 2001 ஆம் ஆண்டில் டாட்-காம் செயலிழந்த போது அமேசான் 1,500 பணியாளர்களை நீக்கியது குறிப்பிடதக்கது.

அமேசான் அசிஸ்டெண்ட், அலெக்ஸா துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தில் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.அந்த துறைகளில் எதிர்பார்த்த அளவு லாபம் வராததாலும், சுமார் 5 பில்லியன் இழப்பு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில் முக்கியமாகன நிறுவங்கள் நிதிநெருக்கடியால் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Previous articleஇளம் பெண்ணிற்கு ஓடும் ஆட்டோவில் அரங்கேறிய அவலம்!!
Next articleசப்பாத்தி குருமா போர் அடித்து விட்டதா? உங்களுக்காக நாவூற வைக்கும் மஷ்ரூம் மசாலா..!