சப்பாத்தி குருமா போர் அடித்து விட்டதா? உங்களுக்காக நாவூற வைக்கும் மஷ்ரூம் மசாலா..!

0
94

காலை மற்றும் இரவு வேலைகளில் பெரும்பாலானோர் சப்பாத்தியை விரும்பிகின்றனர். சப்பாத்திக்கு வழக்கமான குருமா செய்து சாப்பிட்டு வர சலிப்படைந்து விடுவர். அவர்களுக்கு சூப்பரான முகலாய மஷ்ரூம் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்காக சூப்பரான ரெசிபி, இதோ..

தேவையான பொருட்கள் :

காளான் – 300 கிராம் தயிர் – 200 மில்லி கிராம் இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) – 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி தழை – 200 கிராம் வெங்காயம் – 4 மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி கறி மசாலா பொடி – 1 தேக்கரண்டி முந்திரி பொடி – 2 தேக்கரண்டி உலர் தேங்காய் பொடி – 2 தேக்கரண்டி கசகசா – ½ தேக்கரண்டி தக்காளி – 2 எண்ணெய் – 4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு

செய்முறை :

காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை வெண்ணையில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளியை அரைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை மூடிவைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றியதும் வெங்காயம், கசகசா சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். அதனுடன் முந்திரி பொடி, தேப்காய் பொடி சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.

2நிமிடங்கள் கழித்து அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கொள்ளுங்கள். அவை நன்றாக வதங்கியதும் நறுக்கிய களானை சேர்த்து கொள்ளுங்கள். இதில், தண்ணீர் சேர்க்க கூடாது. 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை மற்றும் முந்திரி பொடியை தூவி இறக்கினால் சுவையான முகலாயா மஷ்ரூம் தயார்.